அஞ்சுகோட்டை கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீடு தொகை மோசடி: செயலாளர் கைது

அஞ்சுகோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்காப்பீடு தொகை ரூ.2.15 லட்சம் மோசடி. செயலாளர் கைது.;

Update: 2021-11-30 15:47 GMT

கூட்டுறவு சங்க மோசடியில் ஈடுப்பட்ட செயலாளர் மணி.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் செலுத்திய பயிர்காப்பீடு மற்றும் கடன் தொகை ரூ.2.15 லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்த செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவில் மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கோவிந்தராஜன் அளித்துள்ள புகாரில், திருவாடானை தாலுகா அஞ்சுக்கோட்டை தொடங்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் மணி, ராமு, மற்றும் கற்பவள்ளி ஆகியோர் பயிர் கடனாக பெற்ற ரூ1லட்சத்து 29ஆயிரத்த 790, மற்றும் பயிர் காப்பீடு பிரிமியமாக செலுத்திய 84ஆயிரத்து 765 என மொத்தம் 2லட்சத்து 14ஆயிரத்து 555-ஐ சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் வரவு வைக்காமல் அப்போதைய கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மணி மோசடி செய்துள்ளது தணிக்கையில் தெரியவந்ததுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் வணிக குற்ற புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்தனர்.

Tags:    

Similar News