எஸ்.பி.பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.;

Update: 2022-05-07 10:42 GMT

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எஸ்.பி.பி.பந்தய ரசிகர்கள் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சின்ன மாடு என சுமார் 30க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் சுழற்கோப்பை மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது. இப்போட்டியை சுற்று வட்டாரத்தில் இருந்து பார்வையாளர்கள் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர். தொண்டி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News