திருவாடானை காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
திருவாடானை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கரு.மாணிக்கம் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பு.;
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் இன்று வாக்கு சேகரித்தார். ஊரணி கோட்டை கவலை வென்றான் கடம்பூர் குறுந்தங்குடி கருமொழி, நெய் வயல் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். மத்தியில் உள்ள அராஜக ஆட்சியையும் மாநிலத்தில் உள்ள அடிமை ஆட்சியையும் அகற்றி தமிழகத்தில் தளபதி ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைந்திட தனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கேட்டுக்கொண்டார். பின்னர் மங்கலக்குடியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தோள் கொடுத்து அவர்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என தெரிவித்தார்.