பட்டங்கட்டிகடயர் என சான்றிதழ் வழங்க அரசுக்கு சமூகத்தினர் கோரிக்கை
பட்டங்கட்டி கடயர் என்று சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு அந்த சமூக மக்கள் கோரிக்கை.
இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே உள்ள மோர்பன்னை கிராமத்தில் பட்டங்கட்டி கடையர் சமூக மக்களின் ஆலோசனைக் கூட்டம் மோர்பன்னை தலைவர் மாடம்புரான் தலைமையில், மாவட்ட தலைவர் ராஜதுரை முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அரசு பட்டங்கட்டி கடயர் என்று அழைக்க அரசானை வெளியிட்டது.
இதுபோல் ஜாதி, வருமானம், போன்ற அனைத்து அரசு சான்றிதழ்களிலும் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் காளிதாஸ், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வேலாயுதம், மோர்பன்னை உபத்தலைவர் மைனர் உட்பட தொண்டி, எம்.வி.பட்டிணம், புதுப்பட்டிணம், லாஞ்சியடி, முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்குடி கிராம பேரவை தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.