திருவாடானையில் புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா

அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு திருவாடானை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2021-11-26 06:52 GMT

அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு திருவாடானை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு திருவாடானை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர் கார்த்திகேயன் மாவட்ட அரசு வழக்கறிஞராக தமிழக அரசு நியமித்தது. அதனை தொடர்ந்து அவர் பணியாற்றி வரும் நிலையில் திருவாடானை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சிவராமன் தலைமையில் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் தனபால் முன்னிலையில் பாராட்டு விழா இன்று திருவாடானை நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள வழக்கறிஞர் சங்க உள் அரங்கில் நடைபெற்றது.

இந்த பாராட்டு விழாவில் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் வழக்கறிஞர் ஜிப்ரி உட்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் தாங்கள் அரசு வழக்கறிஞராக தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரியதும், வரவேற்கத்தக்கதும் என்று வாழ்த்தி பேசினர். மேலும் வழக்கறிஞர் கீதா மகிலா நீதிமன்ற அரசு வழக்கறிஞராகவும், வழக்கறிஞர் சபரிநாதன் மனித உரிமை அரசு வழக்கறிஞராகவும் தேர்வு செய்தற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இறுதியாக வழக்கறிஞர் சங்க செயலாளர் ராம்குமார் நன்றி உரையாற்றினார்.

Tags:    

Similar News