தொண்டியில் பா.ஜ.க. கொடியேற்ற போலீசார் அனுமதி மறுப்பு

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பழைய பஸ் முனையம் முன்பு பா.ஜ.க. கொடியேற்ற போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

Update: 2022-04-07 07:48 GMT

தொண்டியில் கொடியேற்ற அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் அங்கு கோஷமிட்டனர்.

பா.ஜ.க. தொடக்க நாளையொட்டி தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திருவாடானை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கொடியேற்றுவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொண்டி பழைய பஸ் முனையமும் பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடி முன்பு கொடியேற்ற போலீசார் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் கொடியேற்ற வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பா.ஜ.க.வினர் அங்கு கோஷமிட்டபடி நின்றனர். பின்னர் விரைவில் முறையான அனுமதி பெற்று இங்கு கொடி ஏற்றுவோம் என கூறி விட்டு அங்கிருந்து சென்றனர்.

தொடர்ந்து தொண்டி புதுக்குடி காலனி மற்றும் நம்புதாளையில் ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் ஒன்றிய பொதுச்செயலாளர் ஆணிமுத்து, துணை தலைவர் முருகேசன், ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ், பெருமானேந்தல் ரவி குலராமன், ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சுந்தரி, ஒன்றிய செயலாளர் வனிதா, புதுக்குடி அண்ணாதுரை, ஊடக பிரிவு மாவட்டசெயலாளர் பாண்டித்துரை, அறிவுசார் பிரிவு மாவட்ட செயலாளர் குருஜி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டி நம்புதாளை, பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News