தொண்டியில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தீக்குளிக்க முயற்சி
தொண்டியில் குடும்ப பிரச்சனை காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி வெள்ளை மணல் தெருவைச் சேர்ந்தவர் வீரன் (32) .இவரது மனைவி அஞ்சம்மாள் (22) வீரன் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணிடம் கள்ளதொடர்பு வைத்து இருப்பதாக தெரிய வருகிறது.
இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இதுதொடர்பாக திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நீதிமன்றம் வரை சென்று திரும்பியுள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில் மீண்டும் இருவருக்குள் மீண்டும் அதே பிரச்சனையின் காரணமாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஆத்திரமடைந்த அஞ்சம்மாள் மண்னென்யை உடலில் உற்றிக் கொண்டு அண்ணாநகர் பகுதிக்கு சென்று உடலில் தீ வைத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் மீது தண்ணீரை ஊற்றினர்.
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மீது உள்ள ஆத்திரத்தில் தெருவில் மண்ணெண்ணை ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.