ஆதார் அட்டை: திருவாடனையில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

பணியாளர் விடுமுறையில் சென்றால் அதற்கான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்;

Update: 2021-09-14 11:20 GMT

திருவாடனையில் ஆதார் அட்டை பதிவு செய்ய  வந்த பொதுமக்கள் மையத்தில் ஊழியர் இல்லாததால்  தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாடானை தாலுகாவில் ஆதார் அட்டை எடுக்கும் மையம் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஒரு நாளைக்கு 20 முதல் 50 பேருக்கு  மட்டுமே ஆதார் அட்டைக்கான  பதிவு செய்யப்பட்டு  வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தேதியை ஒதுக்கி டோக்கன் கொடுக்கப்படும். இந்நிலையில், இன்று டோக்கன் வழங்கப்பட்டுள்ள அனைவரும் காலையில் ஆதார் மையத்திற்கு வந்து காத்திருந்தனர். ஆனால், அங்கு பணிக்கு வரும் ஊழியர் அவசர விடுப்பில் சென்றுவிட்டதால், பணிகள் தொடங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த  பொதுமக்கள்,  பல முறை அலைந்து டோக்கன் பெற்று ஆதார் அட்டை எடுக்க வந்து காத்திருக்கும் நிலையில், பணியாளர் விடுமுறையில் சென்றதால், அதற்கான மாற்று பணியாளரை ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி,  தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வருவதற்கு சற்று நேரம் இருந்த நிலையில், ஆதார் எடுப்பதற்கு  மீண்டும் நேரம் ஒதுக்கி டோக்கன் தருவதாக ஊழியர்கள் கூறியதன் பேரில்,  அனைவரும் மக்களும் கலைந்து சென்றனர்.ஆதார் எடுக்க தினமும் 50 முதல் 60 -க்கும் மேற்பட்ட ஒரு சிறு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்து அலைவதால், ஆங்காங்கே ஆதார் எடுக்கும் முகாம்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை வைத்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News