தொண்டி அருகே 4 தலைமுறை கண்ட 132 வயது மூதாட்டி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு
தொண்டி அருகே நான்கு தலைமுறைகளை கண்ட 132 வயது மூதாட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
தொண்டி அருகே நான்கு தலைமுறைகளை கண்ட 132 வயது மூதாட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள வேலாங்குடி கிராமத்தில் 4 தலைமுறைகளை கண்ட 132 வயது மூதாட்டி உடல் நலக்குறைவால் நேற்று மாலை உயிரிழந்தார். வேலாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சந்தனம்மாள். இவரது கணவர் ஆரோக்கியசாமி அதே கிராமத்தில் தோட்ட காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆரோக்கியசாமி கடந்த 1982ம் ஆண்டு காலமானார்.
இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் பத்து பேரில் தற்போது சேசுராஜ், அருளானந்த் என இரண்டு ஆண் பிள்ளைகளும் தேவனேசம், பாத்திமா மேரி, பாக்கியமேரி என மூன்று பெண் பிள்ளைகள் உயிருடன் உள்ளனர். இவர்களுக்கு பேரன் பேத்தி 25 பேரும், கொள்ளு பேரன் பேத்தி 50 பேரும், பூட்டி 2 பேரும் உள்ளனர். சந்தனம்மாள் உடலுக்கு கொடிபங்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய பலர் மலர் அஞ்சலி செலுத்திய பிறகு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவரது வயது குறித்து வட்டாட்சியர் அலுவலகம் வாயிலாக உறுதிப்படுத்த கேட்டபோது அதற்கான ஆவணங்களை பரிசீலித்து வருவதாக சொல்லப்பட்டது. அந்த கிராம மக்கள் பிறந்த 132 வயது சந்தனம்மாளுக்கு பிறப்பு, இறப்பு தேதி குறிப்பிட்டு பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தினர் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நால்லடக்கம் செய்தனர். 132 வயது வரை வாழ்ந்த சரித்திரம் இந்தியாவிலேயே இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.