இராமநாதபும் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு!

இராமநாதபும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் இறந்தனர்.;

Update: 2021-05-15 10:13 GMT

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. ராமநாதபுரத்தில் 1524 பேர் தற்பொழுது நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் மட்டும் 2293 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் .இதில் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்டோர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நிலையில்  ஒரே நாளில் மட்டும் சிகிச்சை பலனின்றி 8 பேர் பலியாகியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சரியான உணவு வழங்கப்படுவதில்லை சுகாதார குறைபாடு மருத்துவர்கள் சரிவர சிகிச்சையளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News