தொண்டி அருகே கொள்முதல் நிலையத்தில் 7000 நெல் மூடைகள் மழையில் நனைந்து சேதம்

தொண்டி அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தேக்கி வைப்பட்டிருந்த 7000 நெல் மூடைகள் மழையில் நனைந்து சேதமானது.;

Update: 2022-04-10 06:58 GMT

மழையில் நனைந்து சேதமான நெல் மூடைகள்.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள திருவெற்றியூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரம் நெல் மூடைகள் வெப்ப சலனம் காரணமாக அதிகாலை பெய்த பரவலான கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன.

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் பத்துக்கு மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூடைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News