ஆர்.எஸ்.மங்கலம் அருகே கள் பறிமுதல்: 3 பேர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே பனங்கள் விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே ஏந்தக்கரை கிராமத்தில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பனங்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆர்.எஸ். மங்கலம் காவல் ஆய்வாளர் தேவி அறிவுறுத்தலின்படி போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக பனங்கள் விற்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சூசை அருள் மகன் ஜான் கென்னடி (33), சந்தனம் மகன்கள் சேசு (50), ராயப்பன் (42) ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து 5 லிட்டர் பனங்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.