மருத்துவமனை இருக்கு- ஆனா மருத்துவர்கள் இல்ல - அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ
டெக்னீசியன் இல்லை - அதனால் உள்நோயாளிகள் இல்லை
திருவாடானை எம்.எல்.ஏ கருமாணிக்கம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த போது காலியாக இருந்த படுக்கைகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்..
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் இன்று தொண்டி, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவமனைகளை பார்வையிட்டார். தொண்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு உள்நோயாளிகள் யாரும் இல்லாத நிலையில் காலியாக இருந்த படுக்கைகளில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார். தேவைப்படும் உதவிகளை செய்வதாகவும் கூறிய நிலையில், அடுத்ததாக திருவாடானை அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.
மருத்துவமனையில் ஒரு உள் நோயாளிகள் கூட இல்லாத நிலையில் காலியாக இருந்த படுக்கைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரித்தபோது கொரோனோ வைரஸ் தொற்றின் காரணமாகவும், போதிய டெக்னீசியன் இல்லை என்றும், அதனால் உள்நோயாளிகள் இல்லை என்றும் கூறினார்கள்.
மேலும் கொரோனா வைரஸ் சம்பந்தமாக வேக்சினேசன், ஸ்கிரீனிங் செய்யப்படுகிறதா என்று கேட்டதற்கு மருத்துவர்கள் அதற்கான வசதிகள் இல்லை என்று பதில் கூறினார்கள். மேலும் மருத்துவர்கள் இல்லை என்றும் கூறினார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.
திருவாடானை தாலுகா தலைமை மருத்துவமனையில் 42 படுக்கைகள் உள்ளது 30 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இருந்தும் திருவாடனை மருத்துவமனையில் ஒரு உள் நோயாளிகள் கூட இல்லாதது வினோதமாக இருப்பதாகவும், இந்த பேரிடர் காலத்தில் அதற்கான சிகிச்சையோ, தடுப்பு ஊசியோ போடப்படாமல் இருப்பது வினோதமாக இருந்தாக அவர் கவலை தெரிவித்தார்.