வீட்டிற்குள் சீறிய நல்ல பாம்பு

திருவாடானையில் வீட்டிற்குள் சீறிய நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்தனர்;

Update: 2021-02-19 16:55 GMT

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சினேகாவள்ளிபுரத்தைச் சேர்ந்தவர் சோமன் மகன் மகாலிங்கம் (50) இவர் இன்று மாலை தனது வீட்டில் கட்டிலில் அமர்ந்திருந்த போது சமையலறை உள்ளே பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தின் பேரில் அங்கு வந்த நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சமையலறைக்குள் பதுங்கி சீறிக்கொண்டிருந்த நல்லபாம்பை லாவகமாக மடக்கிப் பிடித்து பத்திரமாக காட்டுப்பகுதியில் விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News