இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி சிறுவர்கள் தர்ணா போராட்டம்

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மணி நேரத்திற்கு மேல் பள்ளிச் சிறுவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்.;

Update: 2021-11-22 12:01 GMT

அரசத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி குழந்தைகள் 50 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மணி நேரத்திற்கு மேல் பள்ளிச் சிறுவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ளது அரசத்தூர். இந்த ஊருக்கு பல ஆண்டுகளாக சாலை வசதி எதுவும் இல்லை. அதனால் அந்த கிராமத்து பொதுமக்கள் ஒத்தையடி பாதையிலே கிராமத்திற்கு செல்ல வேண்டிய அவல நிலை நிலவுவதாகவும், மழைக்காலத்தில் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், இறந்த உடல்களை மயானத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமலும், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் அவதிப்படுவதாகவும், மெயின் ரோட்டில் இருந்து 500 மீட்டர் சாலையை சீரமைத்து தார் சாலையாக தரம் உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, அரசத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி குழந்தைகள் 50 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவுக்கும் வராத அந்த தர்ணா போராட்டம் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து தங்களுடைய கோரிக்கையை ஏற்றால் தான் போராட்டத்தை திரும்பப் பெறுவோம் என்று பிடிவாதமாக 3 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகை தந்து அவர்களிடம் குறையைக் கேட்டு அதனை தீர்த்து வைக்க ஆவன செய்கிறேன் என்று உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். மூன்று மணி நேரத்திற்கு மேலாக பள்ளிச் சிறுவர்கள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியதால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News