ராமநாதபுரத்தில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நமீதா தீவிர பிரசாரம்
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் குப்புராமை ஆதரித்து நடிகை நமீதா ராமேஸ்வரத்தில் பிரச்சாரம் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார்.;
தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது, தமிழகம் முழுவதும் தலைவர்கள் நட்சத்திர பேச்சாளர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தங்களது பரப்புரையை நடத்தி வருகின்றனர்,
இந்த நிலையில் நேற்று இராமேஸ்வரம் வந்த நடிகை நமீதா இன்று காலை இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் குப்புராம் அவர்களை ஆதரித்து ராமேஸ்வரத்தில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய நமீதா மத்திய மாநில அரசுகள் செய்த சாதனைகளை எடுத்துக்கூரி வாக்கு சேகரித்தார், மேலும் நடிகை நமீதா பேசும் போது அதிமுக பாஜக கூட்டணியில் வேட்பாளராக நிற்கும் குப்புராம் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் அப்படி வெற்றி பெற செய்தால் ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்கள்,
அதேபோல மாதம் குடும்பத் தலைவிக்கு 1,500 ரூபாயும் இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படும் எனவே குப்புராம் அவர்களுக்கு வாக்களித்து தாமரையை மலர செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது அதிமுக நகர் செயலாளர் கேகே. அர்ஜுனர் மட்டும் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.