தேவர் ஜெயந்தி விழாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : போலீஸ் டிஜிபி!

தேவர் ஜெயந்தி விழாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீஸ் டிஜிபி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-08-26 09:00 GMT
  • whatsapp icon

தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பை பலப்படுத்த, டி.ஐ.ஜி., -- எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி.,க்களை நியமனம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்:

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா, நாளை துவங்கி, 30ம் தேதி நிறைவு பெறுகிறது. முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

பாதுகாப்பு பணியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, தென் மண்டல ஐ.ஜி., நரேந்திரன் நாயர் தலைமையில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பை பலப்படுத்த டி.ஐ.ஜி.,க்கள் வேலுார் முத்துசாமி, திருச்சி பகலவன், கோவை சரவணசுந்தர், தஞ்சாவூர் ஜெயந்திரன் ஆகியோரும், எஸ்.பி.,க்கள் வேலுார் மணிவண்ணன், திருவண்ணாமலை கார்த்திகேயன், செங்கல்பட்டு சாய் பிரணீத், காஞ்சிபுரம் சுதாகர், ஈரோடு ஜவஹர், சேலம் அருண் கபிலன் உட்பட, 25 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கூடுதல் எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி.,க்கள், 73 பேரையும் நியமனம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் உள்ள கோரிப்பாளையத்திலும் தேவர் சிலை முன்பாக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மதுரை சிம்மக்கல் ,கோரிப்பாளையம் ,பெரியார் பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர்.

மேலும் ,கோரிப்பாளையத்தில் உள்ள தேவ சிலையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை நகர காவல் துறை ஆணையர் லோகநாதன் தலைமையில் காவல்துறை துணை ஆணையர்கள்,  உதவி ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News