மீனவர்கள் 12 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-03-24 04:30 GMT

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினரிவ் அத்துமீறல்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறை மூகத்தில் இருந்து 170 விசைப்படகுகளிலும், ஜெகதாப்பட்டி னம் துறை முகத்தில் இருந்து 85 விசைப்படகுகளிலும் நேற்று முன்தினம் (22.3.2023) அதிகாலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நெடுந்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படை யினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி, கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மாலதி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற சிவக்குமார், கலையரசன், லோகேஸ்வரன், சக்தி, பிரபு, சுந்தர மூர்த்தி.

ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற முருகானந்தம், விசாலிங்கம், பாரதிதாசன், சசிக்குமார், நயில், ரவி உள்ளிட்ட 12 மீனவர்களையும் சிறைப் பிடித்தனர். மேலும், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீண்டும் கைது: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்:



இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்  எழுதிய கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் 23.3.2023 -ஆம் தேதி 12 தமிழக மீனவர்கள், அவர்களின் 2 விசைப் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 28 மீன வர்களும், 4 படகு களும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட் டுள்ளன.

இலங்கைக் கடற்படை யினரால் நமது மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது மனவேதனை அளிக்கிறது. இது தொடர்பாக, தமிழக அரசு பல கண்டன கடிதங்களை அனுப்பியும், இது தொடர்வது கவலை அளிக்கிறது.இதை தடுத்து நிறுத்த மத்திய அரசு, துாதரக முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையிலும், மீனவர்கள் மீதான தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள் நடப்பது வருத்தம் அளிக்கிறது.

எனவே, பாக். ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர் களின் மீன்பிடி உரிமையை படையினரின் நடவடிக்கைக ளுக்கு மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது தொடர்பாக உறுதியான மற்றும் காலவரை யறைக்குள்பட்ட ஒரு திட்டத்தை உடனடியாக வகுக்க வேண்டும்.

இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 104 மீன்பிடி படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையால் விடுவிக்கப்பட்ட5 படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. 16 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட 28 மீனவர்கள், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News