பெரம்பலூர் நகை பட்டறையில் திருட்டு: காவல்துறையினர் விசாரணை
பெரம்பலூர் நகரப் பகுதியில் நகை பட்டறையில் நகை திருடு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் நகரில், சிவன் கோயில் பின்புறம் தேரடி வீதியில், காசி வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இதில் பாலசுப்பிரமணியம் என்பவர், நகை செய்யும் பட்டறையை, ஆறு வருடங்களாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வெளியூர் சென்றுவிட்டு மாலையில், நகைக்கடை பட்டறைக்கு வந்து பார்த்தபோது, கடை பூட்டை உடைத்து உள்ளே இருந்த 4 பவுன் நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.