விலை நிலங்களை சேதப்படுத்தும் காட்டெருமை: விவசாயிகள் கவலை
உதகை நகரில் இரவு நேரங்களில், காட்டெருமை விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
உதகை எல்கில் எனும் பகுதியில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உதகை எல்கில் எனும் பகுதியில் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீரைத் தேடியும், உணவைத் தேடியும் ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. மேலும், விளை நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட், முள்ளங்கி ,உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருகிறது.
இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இரவு முழுவதும் காட்டெருமைகளை துரத்தும் பணியில் ஈடுபட்டாலும் விளை நிலங்களுக்குள் புகும் காட்டெருமைகள் பயிர்களை மேய்ந்து மிதித்து நாசப்படுத்தி வருகின்றன. எனவே காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.