நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில் 250 நிலையான தடுப்பூசி முகாம்கள், 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-01-20 15:22 GMT

மாதிரி படம்

நீலகிரி மாவட்டத்தில்  வருகிற 22-ந் தேதி நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில்  250 நிலையான தடுப்பூசி முகாம்கள், 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. முகாம்கள் 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

ஒரு முகாமுக்கு 4 பணியாளர்கள் வீதம் மொத்தம் 270 முகாம்களுக்கு 1,080 பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் சம்மந்தமான நோய் உள்ளவர்கள், நாள்பட்ட வியாதி உள்ளவர்கள் புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 5 லட்சத்து 38 ஆயிரத்து 27 பேர், இரண்டாம் தவணை 5 லட்சத்து 13 ஆயிரத்து 300 பேர் என மொத்தம் 10 லட்சத்து 55 ஆயிரத்து 277 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டு தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் செலுத்த ஆவண செய்ய வேண்டும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News