உதகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம்

அரசு அலுவலர்கள் பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் உதகையில் நடைபெறவுள்ளது

Update: 2022-03-06 13:00 GMT

நீலகிரி கலெக்டர் அம்ரித்

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் வரும் 14.03.2022, 15.03.2022 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை உதகை பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது.

15.03.2022 மாலை 3 மணிக்கு ஆட்சி மொழி கருத்தரங்கில் கலெக்டர் உரையாற்றுகிறார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பயிலரங்க தொடக்க உரையை தொடர்ந்து ஆட்சி மொழி வரலாற்று சட்டம், ஆட்சி மொழி செயலாக்க அரசாணைகள், மொழிபெயர்ப்பு கலைச்சொல்லாக்கம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும், குறைகள் நடவடிக்கையும் ஆகிய தலைப்புகளில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

ஆட்சிமொழி கருத்தரங்கம் குறித்து அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் கருத்துரை வழங்க இருக்கின்றனர்.

அரசு அலுவலங்களில் தமிழ் ஆட்சிமொழி செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் சம்சுதீன் செயல்படுவார் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

Tags:    

Similar News