உதகையில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி
உதகை நகராட்சியில் பணிபுரியும் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு நகர்மன்ற கூட்டரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது.;
நீலகிரி மாவட்டத்தில் 15 உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதற்காக 15 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்ள 183 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
உதகை கராட்சியில் பணிபுரியும் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு, நகர்மன்ற கூட்டரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பயிற்சி அளித்தார். பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ள எந்திரங்களை வார்டு, வாரியாக எடுத்து வர வேண்டும்.
எந்திரங்களின் எண்ணை பார்த்து, பதிவேட்டில் உள்ள எண் சரியாக உள்ளதா என்று உறுதிப்படுத்த வேண்டும். முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும். வாக்குப்பதிவு எந்திரத்தின் பட்டனை அழுத்தி வேட்பாளர் வாரியாக பதிவான வாக்குகளை எண்ண வேண்டும். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரத்தை படிவங்களை நிரப்பிதேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.