உதகை அருகே பெண்ணிற்கு குரங்கு பேன் பார்க்கும் வீடியோ வைரல்
உதகை அருகே ஒடயரட்டி என்னும் கிராமத்தில் பெண் தோளில் ஏறிய குரங்கு அவர் தலையில் பேன் பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.;
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரும் குரங்குகள் பொதுமக்கள் பயன்படுத்த கூடிய தண்ணீர் குழாய்களை உடைப்பதும், கேபிள் வயர்களை அறுப்பதும், பல மரங்களை நாசம் செய்வதும் என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் உதகை அருகே உள்ள ஒடையரட்டி என்னும் கிராமத்தில் குடியிருப்புக்குள் குரங்கு கூட்டம் ஒன்று புகுந்துள்ளது. இந்த கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு குரங்கு அந்த கிராமத்தில் நடந்து சென்ற ஒரு பெண்மணியின் தோல் மேல் ஏறி அந்தப் பெண்மணியின் தலையில் பேன் பார்க்க ஆரம்பித்துள்ளது. இதை ஆச்சரியத்துடன் பார்த்த அப்பகுதி மக்கள் இதனை வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த பெண்ணிற்கு குரங்கு பேன் பார்க்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.