ஊட்டியில் கோத்தரின பழங்குடியினர் சாலை மறியல்
உதகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியினர் ஊட்டி மைசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு;
உதகை ஆட்சியர் அலுவலகத்தை கோத்தர் பழங்குடியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உதகை அருகே முத்தோரை பாலடாவில் இருக்கும் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மேல் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்து பாதிக்கப்பட்ட பழங்குடியின மாணவியின் தாய் உட்பட பழங்குடியினர் 100-க்கும் மேற்ப்பட்டடோர் மாவட்ட ஆட்சியர் அலவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக ஆட்சியர் நேரில் வந்து விளக்கமளிக்க கோரி திடீரென உதகை - மைசூர் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.பின்னர் இரண்டு நாட்களுக்குள் தலைமை ஆசிரியரை கைது செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.கோத்தர் பழங்குடியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.