உதகையில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

நீலகிரியில் காலநிலையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட பிளாஸ்டிக் பயன்படுத்த பரிசீலிக்கவேண்டும் என வணிகர்கள் கோரிக்கை

Update: 2022-03-02 09:41 GMT

நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வணிகர் சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உதகை கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் பேசும்போது,

நீலகிரியில் கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தீர்மானம் நிறைவேற்றி, ஒப்புதல் பெற்று மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது. நீதிமன்றம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டி அரசு சார்ந்த அனைத்து துறைகளும் உறுதி செய்ய வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறது. இந்த சீரிய முயற்சி வெற்றி பெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதற்கு வணிகர் சங்க பிரதிநிதிகள் துணை நிற்க வேண்டும். 50 மைக்ரான் தடிமனுக்கு மேலான பொட்டலமிடம் பிளாஸ்டிக் கவர்களை நீலகிரியில் காலநிலையை கருத்தில் கொண்டு பயன்படுத்த பரிசீலிக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர். சுற்றுச்சூழல் பொறியாளர் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் 1.1.2019-ந் தேதி முதல் தடை செய்யப்பட்டதால் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றார். முகாமில் வணிகர் சங்க பிரதிநிதிகள், வருவாய்த்துறை, நகராட்சி பேரூராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News