உதகையில் இயற்கை முறை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து, உதகை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Update: 2022-01-21 00:45 GMT

வேளாண்மைத்துறை சார்பில், உதகை, கக்குச்சி கிராம விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டம் உதகை வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம்,  விரிவாக்க சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் (அட்மா) 2021-2022-ம் ஆண்டின் கீழ், காய்கறி மற்றும் பழப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய்களை கையாளும் முறை குறித்து,  கக்குச்சி கிராம விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிதா தலைமை தாங்கி,  தோட்டக்கலைத் துறையில் இயங்கி வரும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். இயற்கை விவசாயம்,  இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. உதவி தொழில்நுட்ப மேலாளர் அஸ்வினி வரவேற்று பேசினார். விவசாயிகள், தோட்டக்கலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News