தொடர் விடுமுறையால் உதகை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் உதகை அரசு தாவரவியல் பூங்கா களைகட்டி காணப்பட்டது.;

Update: 2022-04-17 15:21 GMT

தொடர் விடுமுறை எதிரொலியாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சித்திரைத் திருநாள் ஈஸ்டர் பண்டிகை வார விடுமுறை நாட்கள் என தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக உதகை குன்னூர் கோத்தகிரி கூடலூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்களை காண சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.

உதகையில் காலைவேளையில் வெயிலும் மதியம் மழை என இருவேறு காலநிலையால் குளு,குளு சீதோசன காலநிலை நிலவுகிறது. இதனால் உதகையில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர் இதில் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் பூங்காவில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பூங்காவில் உள்ள பெரணி இல்லம் கண்ணாடி மாளிகை புல் மைதானத்தில் உள்ள பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் கண்டுகளித்தனர். தொடர்ந்து பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் உதகை அரசு தாவரவியல் பூங்கா களைகட்டி காணப்படுகிறது.

Tags:    

Similar News