உதகையில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
உதகையில், 2 பேரிடம் இருந்து ரூபாய் 21,000 புகையிலை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.;
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே முத்தோரை பாலாடாவில் உதகை ஊரக போலீசார் சோதனை நடத்தினர்.2 பேர் சந்தேகத்துக்கு இடமாக சென்றனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, அரசால் தடை செய்த புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. 2 பேரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ரூபாய் 21,000 புகையிலை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தடை செய்த புகையிலை பொருட்களை பயன்படுத்திய, முத்தோரை பாலாடாவை சேர்ந்த அமன் உல்லா (40), குமார் (51) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.