உதகையில் மனைவியை கொன்றவர் மருத்துவமனையில் உயிரிழப்பு

2017ம் ஆண்டு மனைவியை கொன்ற நபர் நீதிமன்றத்தில் ஆஜராகி தப்பிய நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.;

Update: 2021-09-16 17:00 GMT

குற்றவாளி பென்னி.

உதகையில் மனைவியை கொன்றவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

உதகை அருகே எடப்பள்ளி அணியாடா பகுதியை சேர்ந்த பென்னி (58) என்பவர் தனது மனைவி அந்தோணியம்மாள் நடத்தையில் சந்தேகப்பட்டு மகள் வீட்டில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இந்த வழக்கு விசாரணையில் நேற்றைய முன்தினம் குற்றம் சாட்டப்பட்ட பென்னிற்கு உதகை மகளிர் மன்றம் தீர்ப்பு வழங்க இருந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான பென்னி அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதையடுத்து அவரை கண்டுபிடித்த போது அதிகமான குடிபோதையில் இருந்ததால் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் இன்று கோர்ட்டில் ஆஜராவதற்கு அழைத்துச் செல்லும் நேரத்தில் சிகிச்சை பெற்று இருந்த பென்னியின் நாடித்துடிப்பு குறைந்தது.

மேலும் சிகிச்சைக்காக சிறுநீரகத்திலிருந்து வெளியேறும் மருத்துவ குழாயை பென்னி இழுத்து அறுத்துள்ளார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்ல இருந்த நிலையில் அவர் உதகை அரசு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

Tags:    

Similar News