திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆகும் கனவு ஒருபோதும் நிறைவேறாது என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி ஊட்டியில் பேசினார்.
ஊட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து இன்று உதகை காப்பியோ சந்திப்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கடந்த 2006-ம் ஆண்டில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் அப்போதெல்லாம் மக்களைப் பற்றிய அக்கறை இல்லாமல் எதுவும் செய்யாமல் இப்போது முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு கனவு காண்கிறார் .நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் தனி கவனம் செலுத்தி அனைத்து திட்டங்களும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிமுக அரசு செய்து வருகிறது என்றார்.