முழு ஊரடங்கிலும் கடமை தவறாத தூய்மைப்பணியாளர்கள்

முழு ஊரடங்கு அமலில் இருந்த போதும்கூட, ஈடுபாட்டுடன் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணிகளை வழக்கம் போல் செய்து, அனைவரின் பாராட்டை பெற்றனர்.

Update: 2021-04-25 11:50 GMT

உதகை நகரில் இன்று முழு ஊரடங்கு காரணமாக வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. எனினும், முன்களப் பணியாளர்களாக உள்ள தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியை, வழக்கம் போல் மேற்கொண்டனர்.

உதகை நகரில் உள்ள சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, மார்க்கெட் மணிக்கூண்டு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. மேலும் சாலையிலுள்ள மண் அகற்றி தூய்மை படுத்தப்பட்டது இப்பணியில் தூய்மைப்பணியாளர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

தமிழகமே முழு ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடக்க, வழக்கம் போல் முழு ஈடுபாடுடன் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணிகளை செய்ததை பலரும் பாராட்டினர்.

Tags:    

Similar News