தமிழக பட்ஜெட்டில் உதகைக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு

உதகை நகரில் சிறப்பு திட்டங்கள், நிகழ்ச்சிகள் மேற்கொள்ள சிறப்பு நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது;

Update: 2022-03-18 12:30 GMT

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் 

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் செய்தியாளர்களுக்கு பேட்டியில் தெரிவித்ததாவது: 200 ஆண்டுகளுக்கு முன்பு 1822-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் உதகை கண்டறியப்பட்டது.

இதனை நினைவுகூறும் வகையில் சிறப்பு திட்டங்கள், நிகழ்ச்சிகள் மேற்கொள்ள முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதனை நிறைவேற்றும் விதமாக உதகை நகரில் சிறப்பு திட்டங்கள், நிகழ்ச்சிகள் மேற்கொள்ள சிறப்பு நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலா தலமாக உள்ள காரணத்தால் மல்டிலெவல் கார் பார்க்கிங், இயற்கை நீர்வீழ்ச்சி, பார்க் போன்ற வசதிகளை செய்து மேம்படுத்த உதகை நகராட்சி ஆணையாளர் மூலம் பல்வேறு திட்டங்களுக்காக ரூபாய் 114 கோடி மதிப்பில் பிரேரணைகள் தயார் செய்து வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறைக்கு அறிக்கை அனுப்பி அனுமதி பெற்று திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். உதகை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உடனிருந்தார்.

Tags:    

Similar News