கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீனில் தளர்வு
வழக்கின் அனைத்து வாய்தாக்களுக்கும் தவறாமல் ஆஜராகவேண்டும் என உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
கோடநாடு வழக்கில் இரண்டாம் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜின் ஜாமினில் சில நிபந்தனை தளர்வுகளை உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் ஊட்டியில் தங்கி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. திங்கள் மற்றும் புதன் கிழமை காலை 10 மணிக்கு, கேரளா திருசூர் மாவட்டம், முகுந்தபுரம் வட்டம் புதுக்காடு காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும்.
மேலும் வழக்கின் அனைத்து வாய்தாக்களுக்கும் தவறாமல் ஆஜராகவேண்டும் என உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் கைதாகியுள்ள கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், ரமேஸ் ஆகியோர்களின் நிபந்தனையை பொருத்து ஊட்டியில் தங்கி இருக்க வேண்டும்.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணிக்கு கோத்தகிரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.