நீலகிரிக்கு ரெட் அலர்ட் : பாதுகாப்பு பணிகள் தயார்-எஸ்.பி பேட்டி
நீலகிரியில் பெய்து வரும் கன மழை காரணமாக மீட்புக்குழுவுடன் போலீசாரும் பணிகள் செய்யவுள்ளதாக நீலகிரி SP தெரிவித்தார்
நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தை மீறி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கன மழை எதிரொலியாக தேவைப்படும் பட்சத்தில் மீட்புக்குழுவினர் உடன் சேர்ந்து போலீசாரும் பணியில் ஈடுபடுவர் உள்ளதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டியளித்தார்.
இன்று முதல் புதிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார் காரணமின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை எச்சரிக்கை விடுத்து அனுப்பியதோடு வழக்கு பதியப்படும் என கூறினார்.
மேலும் முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் எடுக்கும் முகக் கவசங்கள் வழங்கினார். பின்பு செய்தியாளர்களிடம் கூறிய அவர் ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள் மற்றும் பார்சல் முறையில் உணவகங்கள் செயல்படலாம், இதைத் தவிர்த்து கடைகள் திறப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் தற்பொழுது கனமழை எச்சரிக்கையாக ரெட்அலர்ட் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புக் குழுவினர் பலபகுதிகளில் பணியில் ஈடுபட உள்ளனர் தேவைப்படும் பட்சத்தில் அவர்களுடன் சேர்ந்து போலீசாரும் பணியில் ஈடுபடுவார்கள் என காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார்.