உதகையில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

உதகை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததால், நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முற்றுகை பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-24 12:01 GMT

உதகை நகராட்சி வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள். 

உதகை நகராட்சியில் 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்திற்கான ஊதியத்தை இன்று வரை நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என நகராட்சி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். தூய்மை பணியாளர்களின் ஊதிய பிரச்சனையில் மெத்தனம் காட்டுவதாக குற்றச் சாட்டை முன்வைத்தனர்.

மேலும், நகராட்சி ஆணையாளர் எதுவுமே தெரியாதது போல் நடப்பதாகவும், தங்களின் வாழ்வாதாரம் இதனால் மிகவும் பாதிப்படைந்து, வீட்டு வாடகை, மளிகை பொருட்கள் என எதுவுமே வாங்க முடியாமல் உள்ளோம். நகராட்சி நிர்வாகம் முறையான கையுறை, பெருக்குமாரு, உடைகள் எதுவுமே வழங்குவது இல்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். 

குறிப்பாக தங்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கவில்லை என்றால் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News