உதகை பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உதகை தனியார் பள்ளியில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது;

Update: 2022-03-31 10:18 GMT

நீலகிரி மாவட்ட தேசிய பசுமைப்படை CSI CMM மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தின் உயிர் சூழலுக்கும், வன விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பினை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நீலகிரி மாவட்ட தேசிய பசுமைப்படை CSI CMM மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் எஸ்தர் வசந்தி வரவேற்று பேசுகையில் பள்ளி மாணவர்கள் கருத்தரங்கின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவது முக்கியம் என குறிப்பிட்டார்.

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நீலகிரி மாவட்ட இயற்கை விவசாய சங்க செயலாளர் ராமதாஸ் பேசுகையில், தோட்டங்களில் உபயோகப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பொதிந்து வரும் கவர்கள், கொள்கலன்கள் அனைத்தும் பிளாஸ்டிக்கினால் வருவதால் இவை மண் வளத்தையும் நீர் ஆதாரங்களையும் பாதிப்படைய செய்வதோடு இல்லாமல் மண்ணில் இருக்கக்கூடிய மண் புழுக்களையும் மண்ணிற்கு நன்மை செய்யக்கூடிய பூச்சிகளையும் அழித்து வருவதாக கருத்து தெரிவித்தார்.

தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், வனப் பகுதிகளிலும் புல்வெளிகளிலும், நீர் ஆதாரங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் வீசிச் செல்வது அப்பகுதியின் தாவர இனங்களுக்கும் வனவிலங்குகளுக்கும் நீர் ஆதாரங்களையும் பாதிப்படையச் செய்கிறது.

நீலகிரி போன்ற குளிர்ப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் மூச்சுத்திணறல் ஆஸ்துமா ஒவ்வாமை போன்ற தொற்றுக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன நீர் ஆதாரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பினை மாணவர் சமுதாயம் உணர்ந்து வீட்டிலிருந்தே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என கருத்து தெரிவித்தார்.

தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் சித்தர் ஹரி நன்றி கூறினார். நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை பொறுப்பாசிரியர் சுரேஷ் செய்திருந்தார்.

Tags:    

Similar News