உதகையில் இரு வேறு இடங்களில் போக்சோவில் இருவர் கைது

உதகையில் ஒரே நாளில் இரண்டு நபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-07-21 11:49 GMT
உதகையில் இரு வேறு இடங்களில் போக்சோவில் இருவர் கைது

மாதிரி படம் 

  • whatsapp icon

உதகை அருகே 17 வயது சிறுமி தோட்ட வேலைக்கு சென்றவர் திடீரென காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். விசாரணையில், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார், 30, கேரட் வேலைக்காக ஊட்டியில் தங்கி வேலை செய்த போது, சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிய வந்ததது .

இதனையடுத்து, சந்தோஷ்குமார் சிறுமியை கடத்தி திருமணம் செய்துள்ளார். போலீசார் சந்தோஷ்குமார் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல் உதகை ஓல்டு ஊட்டியில், 16 வயது சிறுமியை, வெலிங்டன் பகுதியை சேர்ந்த, ஸ்ரீ என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் ஊட்டி பி1 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இருவரை கோவையில் மீட்டு போலீசார் ஊட்டிக்கு அழைத்து வந்தனர். இதில், ஸ்ரீ மீது போலீசார் 'போக்சோ' வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News