ஊட்டச்சத்து பெட்டகம்- உதகையில் அமைச்சர் ராமசந்திரன் வழங்கினார்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு, 12 வகையான பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தினை, உதகையில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் வழங்கினார்.

Update: 2021-06-04 12:38 GMT

நீலகிரி மாவட்டத்தில், கோவிட்-19 பேரிடர் காலத்தில், குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனை எளிதில் கிடைக்கும் வகையில் 24 மணி நேரம் செயல்படக்கூடிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 1800 425 0262 அறிமுகப்படுத்தப்பட்டது.

உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தினார். அதேபோல், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு 12 வகையான பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை, வீட்டுத்தனிமையில் உள்ளவர்களுக்கு மருந்து பெட்டகங்களை, அமைச்சர் கா.ராமசந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, நீலகிரி கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார்.

பின்னர், வனத்துறைத்துறை அமைச்சர் கூறியதாவது: இன்று அறிமுகம் செய்யப்பட்ட, 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் மருத்துவ உதவி மனவள ஆலோசனை, உணவு, தங்குமிடம் ஓய்வூதியம், குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை ஆகியவை சார்ந்த தகவல்கள் மற்றும் உதவிகள் வழங்கப்படுகிறது. எனவே, குழந்தைகள், பெண்கள் தங்களுக்கு எதிராக ஏற்படும் குற்றங்கள் குறித்து எவ்வித அச்சமும் இன்றி இலவச தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார்கள் அளிக்கலாம் என்றார். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன், உதகமண்டலம் சட்டமன்ற உறுப்பினர் . கணேஷ், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன், குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்சித்சிங் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சிலீமா அமாலினி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News