உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஒருவர் ஆஜர்
கோடநாடு கொலை வழக்கின் மறு விசாரணை நடந்து வரும் நிலையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4ம் நபர், இன்று ஆஜரானார்.;
தமிழகத்தை பரபரப்பாக்கியுள்ள கோட நாடு கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மறுவிசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மட்டுமல்லாது, அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைத்து தரப்பினரையும் ஐ.ஜி மற்றும் எஸ்.பி. அத்துடன் ஏ.டிஎஸ்.பி. என தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் 4 ம் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜம்சீர் அலி, இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.