கோடநாடு வழக்கு: உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை விசாரணை

கோடநாடு வழக்கில் விசாரணை செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் 34 நாட்களுக்கு பிறகு நாளை விசாரணை நடைபெறவுள்ளது;

Update: 2021-09-30 16:00 GMT

பைல் படம்.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று இந்த வழக்கு விசாரணை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது காவல் துறை சார்பில் கூடுதல் விசாரணை நடத்த மனுதாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்ற இந்த உத்தரவுக்கு பின் இந்த காவல் துறையின் மறு விசாரணையானது மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட எஸ்பி ஆஷிஸ்ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

34 நாட்கள் நடைபெற்ற இந்த புலன் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் 6 பேரும் வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 40 க்கும் மேற்பட்டவர்களிடமும், 10-க்கும் மேற்பட்ட காவலர்களிடமும் தனிபடையானது விசாரணையை மேற்கொண்டது.

மேலும் வழக்கில் காவல்துறை சார்பில் சந்தோகிக்கப்பட்ட 9-க்கும் மேற்ப்பட்டவர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. 34 நாட்களுக்கு பின் இந்த வழக்கு விசாரணையானது நாளை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு வர உள்ளது. தனிப்படை மூலம் நடந்த இந்த விசாரணையின் அனைத்து வாக்குமூலங்களும் நீதிபதி முன் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள நான்கு பேரிடம் இதுவரை விசாரணை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து விசாரணையில் பரபர திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் இந்த வழக்கு விசாரணை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு வரவுள்ள நிலையில் மீண்டும் பரபரப்பு கூடியுள்ளது.

Tags:    

Similar News