கோடநாடு வழக்கு நீண்ட நேர விசாரணை: 8, 9 ம் நபர்கள் இன்று ஆஜர்
கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8, 9 ம் நபர்கள் இன்று ஆஜரான நிலையில் நீண்ட நேரம் விசாரணை நடந்தது.;
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மறுவிசாரணை தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு திருப்பங்கள் இருந்துவரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் எட்டாம் நபர் மற்றும் ஒன்பதாம் நபராக உள்ள சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி ஆகிய இருவர் இன்று 11:30 மணி அளவில் உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையானது இரவு முழுவதும் நீடித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் நடத்தப்பட்ட விசாரணையின் படி இன்று குற்றம் சாட்டப்பட்ட 8 - 9 நபர்களிடையே நடைபெற்ற விசாரணை நீண்ட நேரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.