கோடநாடு வழக்கு: 2 பேரிடம் இன்று விசாரணை
கோடநாடு எஸ்டேட் அலுவலக ஊழியர்கள் இருவரிடம் டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.;
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணையானது ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் அரசு தரப்பு சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்வர்கள் என அனைவரிடமும் ஊட்டியில் உள் பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
இதுவரை குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் 6 பேரிடம் விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக இருந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையில் மர்மம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தனிப்படையினர் இந்த வழக்கையும் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 21-ம் தேதி தினேஷின் குடும்பத்தினருடன் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று அவருடன் பணியாற்றிய கொடநாடு எஸ்டேட் அலுவலக உதவியாளர்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை டி. எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.