வனத்தில் வறட்சி: விலங்குகளுக்காக உதகை காமராஜர் அணையில் நீர்திறப்பு
முதுமலைக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது.;
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மசினகுடி, வாழைத்தோட்டம், மாயார் உட்பட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே கடுமையான உறைபனி பொழிவு காரணமாக, இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது . குளங்கள், நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் நாட்டுமாடுகள், ஆடு போன்ற கால்நடைகளும் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன.
இந்த நிலையில், கால்நடைகள், விலங்குகளுக்கென, உதகையில் உள்ள காமராஜர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. காமராஜர் அணையில் திறக்கப்படும் நீர், வறட்சி காலம் முடியும்வரை கால்நடைகளுக்கும் வனவிலங்குகளுக்கும் தண்ணீர் கிடைக்கும்.