ஜவகர்லால் நேரு பிறந்தநாள்: கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி வருகிற 12-ம் தேதி நடைபெறுகிறது.

Update: 2021-11-06 10:45 GMT

பைல் படம்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், நடப்பாண்டிற்கான மானிய கோரிக்கை அறிவிப்பின்படி நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வருகிற 14-ம் தேதி ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் வருகிற 12-ம் தேதி நடைபெறுகிறது. கல்லூரி, பள்ளி போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுக்குள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகையாக ரூ. 2,000 வீதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News