தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
நீலகிரி மாவட்டத்தில், தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.;
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், நடப்பாண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40. பெண்களுக்கு வயது வரம்பில்லை.
குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் காலியாக உள்ள தொழில் பிரிவுகளான பொருத்துநர், கடைசலர், கம்மியர் ஆகிய 2 ஆண்டு தொழிற்பிரிவுகளுக்கும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தச்சர், பற்ற வைப்பவர் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கும் அனைத்து பிரிவினை சார்ந்த மாணவர்கள் பயிற்சியில் சேரலாம். கூடலூர் அருகே உப்பட்டியில் பழங்குடியினருக்காக செயல்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.