உதகையில் பாடல் பாடி வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்
உதகை நகராட்சியில் 8வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சேகர், சினிமா பாடலை பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளதால் அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. பிரதான கட்சிகள் மட்டுமல்லாமல் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.
இதில் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும், பல சுயேட்சை வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு உள்ளனர். இதில் உதகை நகராட்சியில் 8வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சேகர் என்பவர் சினிமா பாடலை பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையடுத்து அவர் கூறுகையில், உதகை நகராட்சியில் 8வது வார்டில் போட்டியிடும் தனக்கு டிரம்பெட் என்னும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் ஒரு மேடைப் பாடகர் எனவும் பாடல்களை பாடி வாக்கு சேகரிக்கும் பொழுது பகுதியில் உள்ள மக்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் பாடி மகிழ்வித்து வாக்கு சேகரிப்பது தனக்கும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.
தனது பகுதியில் உள்ள மக்கள் தனக்கு வாய்ப்பு அளித்து வெற்றிபெறச் செய்தால் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பேன் எனவும் இந்த மேடைப் பாடகர் சுயச்சை வேட்பாளர் தெரிவித்தார்.