சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உதகை பூங்காவில் நடனமாடிய மூதாட்டிகள்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உதகை பூங்காவில் மூதாட்டிகள் நடனமாடினர்.;
மகளிர் தினவிழாவில் பெண்கள் நடனம் ஆடினர்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அரசு அலுவலர்கள் ஊழியர்கள் மகளிர் சுய உதவிக்குழுவினர் பூங்கா ஊழியர்கள் இணைந்து சிறப்பாக கொண்டாடினர்.
மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் துவக்கமாக வண்ண பலூன்களை பறக்கவிட்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர் .
நிகழ்ச்சியில் அறுபது வயதுக்கு மேலான மகளிர் நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர் .
மகளிர் தின விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மகளிர் வரைந்த வண்ண கோலங்கள் அமைந்திருந்தன. விழாவை யொட்டி நடத்தப்பட்ட பல்வேறு பல்வேறு போட்டிகளில் ஏராளமான மகளிர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் Dr. மோனிகா ராணா, சமூக நல அலுவலர் தேவ குமாரி, தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சிபிலா மேரி உட்பட ஏராளமான சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு மகளிர் தின விழாவை கொண்டாடினர்.