உதகையில் கோடை சீசனின் முதல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் உள்ளுர் மக்கள் மகிழ்ச்சி;
கடும் பனி, வெயில் காணப்பட்டு வந்த உதகையில் கோடை சீசனின் முதல் மழை துவங்கியது சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது மார்ச் மாதம் வரை உதகையில் பனிக்காலம் மட்டுமல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று மதியம் திடீரென மிதமான மழை பெய்தது கோடை சீசனின் முதல் மழை பெய்துள்ளது சுற்றுலா பயணிகளிடையே மட்டுமன்றி உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழையின் காரணமாக உதகை நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.