உதகையில் வாகன ஓட்டிகளுக்கு நகர டிஎஸ்பி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து
உதகையில், கொரோனா வழி நெறிமுறைகளை பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு, டி.எஸ்.பி. மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
புதிய ஊரடங்கு தளர்வுகள் அமலில் உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் அதிகமாக வந்து செல்கின்றன. இதனால் கொரோனோ கட்டுப்பாடுகள் கடைபிடித்து வாகன ஓட்டிகள் செல்கின்றனரா என, துறை சார்ந்த அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், உதகையில் போலீசார் சார்பில் வித்தியாசமான முறையில் கொரோனா வழிநெறிமுறைகளான முகக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் ஊட்டி டி.எச்.பி. மகேஸ்வரன் மலர் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, போக்குவரத்து எச்.ஐ. வின்சென்ட் ஆகியோர், முகக்கவசம் அணிந்து வாகனங்களில் வந்த அனைவருக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.